விடுதலைப்புலிகளின் அடிப்படை மனநிலை இன்னும் உலகில் உள்ளது – டளஸ் அழகப்பெரும

30 வருடங்கள் நாட்டில் இடம்பெற்று வந்த போரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் முடிவுக்கு கொண்டு வந்து விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முற்றாக அழிந்து போயினர்.  ோரின்
இறுதி வாரத்தை கூறி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒய்வுபெற்றாலும் அவரை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என எரிக் சொர்ஹெய்ம் கூறுகிறார்.
விடுதலைப்புலிகளின் அடிப்படை மனநிலை இன்னும் உலகில் உள்ளது மாத்திரம் அல்ல அவர்களையும் வாழ வைத்து வருகிறது. அவர்களின் பணம் இன்னும் செயற்பட்டு வருவதுடன், நாட்டில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்த பல சக்திகள் தருணம் பார்த்து காத்திருப்பதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது,  மகிந்த
ராஜபக்ஷ அரசாங்கம் முடிவுக்கு வந்து விட்டது எனக் கூறினர்.  ஜனாதிபதி தோற்பார் என தெரிவித்தனர். பல சக்திகள் இணைந்து அரசாங்கத்தை தோற்கடித்து நாட்டை பின்நோக்கி தள்ள முயற்சித்தனர்.  சரத் பொன்சேக்காவிற்கு பின்னால் இருந்து கொண்டு கோடிக்கணக்கான டொலர்களை செலவு செய்தனர்.  பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர்.  எனினும் பொன்சேக்காவின் பின்னால் இருந்தவர்கள் எவரும் தற்போது அவரிடம் இல்லை. அவருக்கு தொலைபேசி அழைப்பை எடுக்கக் கூட எவருமில்லை. குறைந்தபட்சம் வேட்புமனுக்களில் கையெழுத்திட்டவர்கள் கூட அவருடன் இல்லை.  அன்று அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாத சக்திகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு,  வேறு விதமாக நாட்டை குழப்ப நிலைக்குள் தள்ள முயற்சித்து வருகின்றனர்.  ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் இலக்கம் 107 ஷரத்திற்கு அமையவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் நான்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களை வேட்டையாடியது.  அவை எவருக்கும் நினைவில் இல்லை.  நம்பிக்கையில்லா தீர்மானத்தை மகிந்த ராஜபக்ஷ புதிதாக கொண்டு வந்தார் என காட்ட சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. இது முற்றிலும்
பொய்யானது.  ஜனாதிபதி 30 வருடங்களாக சட்டத்தரணியாக பணியாற்றி அனுபவம் கொண்டவர்.  பிரதம நீதியரசரை பயன்படுத்தி தனது தேவையை நிறைவேற்றி கொள்ளவோ, நீதிமன்றத்தை தரம் தாழ்த்தவோ ஜனாதிபதிக்கு எந்த தேவையுமில்லை எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.