மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன தேவன்பிட்டி சென்சேவியர் மற்றும் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணிகள்.
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது…
அந்தவகையில்இன்றைய தினம் (02/03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து தேவன்பிட்டி சென்சேவியர் அணியானது மோதியது..
இவ் ஆட்டத்தில் தேவன்பிட்டி சென்சேவியர் அணியானது 01:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது…..ஆட்டநாயகனாக சென்சேவியர் அணியின் அன்பரசன் தெரிவுசெய்யப்பட்டார்..
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகமானது மோதியது..இவ்வாட்டத்தில் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணியானது 03:02 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு நுழைந்தது..ஆட்டநாயகனாக குறிஞ்சிக்குமரன் அணியின் றிதுசன் தெரிவுசெய்யப்பட்டார்….