வல்வை செய்திகள்

வல்வை வி.க உதையின் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது உரும்பிராய் அண்ணா ஸ்டார் விளையாட்டுக்கழகம் மற்றும் நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம்

வல்வை வி.க உதையின் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது உரும்பிராய் அண்ணா ஸ்டார் விளையாட்டுக்கழகம் மற்றும் நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம்

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில்
இன்றைய தினம் (08 /03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் உரும்பிராய் அண்ணாஸ்டார் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கரவைசுடர் அணியானது மோதியது..விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத இவ்வாட்டத்தில் உரும்பிராய் அண்ணா ஸ்டார் அணியானது 03:02என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.

ஆட்டநாயகனாக உரும்பிராய் அண்ணா ஸ்டார் அணியைச்சேர்ந்த துஸ்யந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் கிளிநொச்சி கனகபுரம் அணியினை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணியானது மோதியது.

பரப்பான ஆட்டத்தில் 04:02 என்ற கோல்கணக்கில் நவிண்டில் கலைமதி அணியானது வெற்றி பெற்று அடுத்தசுற்றுக்குள் நுழைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக நவிண்டில் கலைமதி அணியின் சந்தோஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

நாளைய போட்டிகள்

3 மணிக்கு

புங்குடுதீவு இறுப்பிட்டி
Vs
இரணைமாதாநகர் சென்மேரிஸ்

4 மணிக்கு

மணற்காடு சென் அன்ரனிஸ்
Vs
சாவற்கட்டு மாகாத்மா

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *