வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக்கழகம் மற்றும் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம்
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
தொடரில் முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்
அந்தவகையில் இன்றைய தினம் (14/ 03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வல்வெட்டி கருணாகரன் அணியானது மோதியது..
விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத இவ்வாட்டத்தில் ஆட்டநேர முடிவில் 03:00 என்ற கோல்கணக்கில் கருணாகரன் விளையாட்டுக்கழகமானது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.
ஆட்டநாயகனாக கருணாகரன் அணிக்காக பெறப்பட்ட மூன்று கோல்களையும் பெற்றுக்கொடுத்த அவ் அணியைச் சேர்ந்த அம்சயன் தெரிவுசெய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கம்பர்மலை யங்கமன்ஸ் அணியினை எதிர்த்து புங்குடுதீவு நண்பர்கள் அணியானது மோதியது.
ஆட்டநேர முடிவில் யங்கமன்ஸ் அணியானது 04:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது…
போட்டியின் ஆட்டநாயகனாக கோல்காப்பில் சிறப்பாக செயற்பட்ட யங்கமன்ஸ் அணியின் கோல்காப்பாளர் மகிந்தன் தெரிவுசெய்யப்பட்டார்