வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை ஊரணி பிரதேசத்தில் நேற்று(10.06.2013) காலை வயோதிப பெண் ஒருவர் கொலை

வல்வெட்டித்துறை ஊரணி பிரதேசத்தில் நேற்று காலை வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப் பட்டுள்ளவர் சோதிலிங்கம் தெய்வமலர் (வயது 64) என்று இனம் காணப் பட்டுள்ளார். இன்று காலை சுமார் 11:00 மணியளவில் உறவினர்களின் கவனத்துக்கு வந்த இந்த கொலைச் சம்பவம் பற்றிய மேலதிக எதுவும்விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

கொலைச் சம்பவத்தையடுத்துஇ ஸ்தலத்துக்கு மோப்ப நாய்கள் சகிதம் விரைந்த வல்வெட்டித்துறைப் பொலிசார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் கொலையாளிகள் சம்பந்தப்பட்ட விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
கொலை செய்யப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *