Month: June 2013

வல்வை செய்திகள்

வல்வை ப்ளூஸ் தொடர்ந்தும் முன்னிலையில்.

பிரித்தானிய தமிழ் லீக்கில் சாம்பியன் டிவிசனில் விளையாடிவரும் ப்ளுஸ் அணி இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் ஏழு போட்டியில் வெற்றியும் மழை காரணமாக ஒரு போட்டியில் சமநிலையும் பெற்று 225 புள்ளிகளோடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது… எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (30.062013) ஸ்கை ஸ்டார் CC அணியை எதிர்த்து விளையாட உள்ளது

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தமிழீழ அணி

தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John’s, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A….

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான குழுப்பிரித்தலும் (புதன்கிழமை) மற்றும் 92 அணிகளின் விபரங்களும்.

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான குழுப்பிரித்தலும் (புதன்கிழமை) மற்றும் 92 அணிகளின் விபரங்களும். வல்வை நலன்புரிச்சங்கத்தின் 8 ஆவது வருடாந்த கோடைவிழாவில் நடைபெறவுள்ள மண்ணின் மைந்தர்கள் ஞாபகர்த்த ஜரோப்பியரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான குழுப்பிரித்தல் (Draw) எதிர்வரும் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. பங்குபெற்றும் கழகங்களின் பிரதிநிதிகளை பார்வையாளர்களாக கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   முகவரி   King wood house, 31-39…

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – TNA

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிமை இரண்டாவது தடவையாக சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் தம்மை பிழையாக மீண்டும் வழிநடத்தி விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல்…

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க TNA உடன் கூட இணையத் தயார் – பிள்ளையான்

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் கூட இணைந்து கொள்ளத் தயார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற கலாச்சார வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து…

பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: வடமாகாண ஆளுனர் உத்தரவு

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனால் மாகாணத்தின் சகல வலயக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது. அச்சுற்று நிருபத்திற்கமைய வடமாகாண ஆளுனரின் பிரகாரம் வடமாகாண அரச அலுவலகங்கள்…

நாகர் கோவிலில் உள்ள வல்வை நாயகி

படத்தில் காணப்படுவது 11.75 அடி நீளமுடைய வல்வை நாயகி எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய பாய்மரக்கப்பல் ஆகும் . யாழ் தீபகற்பத்தின் வடமராட்சியின் கிழக்கு கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாகர் கோவில் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள இக்கப்பல், நாகர் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் திருவிழாவான கப்பல் திருவிழாவின் பொழுது பயன்படுத்தப்படுவதாகும். கடந்த வருடம் (2012) வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய…

இந்தியா – சிறிலங்கா – சீனா: உக்கிரமடையும் ராஜதந்திர போர்

சிறிலங்கா இராணுவத்தினருக்கான பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கு பயிற்சிகளுக்காகச் செல்லும் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் அதேசமயம், இதனால் பயிற்சிகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்களும், உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுவதாக சிறிலங்கா அரசு எண்ணுகிறது. இதனால், பாதுகாப்பு அதிகாரிகளைப்…

நாயாக மாறிய இளைஞர்

நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயாகவே மாறியுள்ளார். பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம். இதனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார். இறந்த நாய் ஒன்றின் முகத்தை இவருக்கு பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள். அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ள நிலையில்…

அரசின் கொள்கைகளை ஏற்காதவர்களை வெளியேறுமாறு மஹிந்த எச்சரிக்கை!

“அரசின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு அரசில் இருப்பவர்கள் இருக்கலாம். அதில் முரண்பாடு இருப்பவர்கள் உள்ளிருந்து சதிவேலைகளைச் செய்யாமல் விரும்பிய நேரத்தில் வெளியேறலாம். அதற்கு எதுவித தடைகளும் கிடையாது.”   இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தின்போதே அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.  மேலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப்பலம் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும்…

புலிகளின் தலைவரின் மதிற்பிற்குரிய மூத்த போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்;. லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக…

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தமிழீழ அணி

தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John’s, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A….

வல்வை புட்டணி பிள்ளையார் ஆலயத்தின் கோபுரம் புதிதாக அமைக்கப்படுகின்றது

வல்வை தீருவில் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்கரணி (புட்டணி) பிள்ளையார்ஆலயத்தின் கோபுரம் மற்றும் மணிக்கூட்டு கோபுரம் என்பன புதிதாக நிர்மானிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இக்கோவிலின் முன் வீதி அகலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்புட்டணிப் பிள்ளையார் ஆலயமானது வல்வை சிவன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை குறிபிடத்தக்கது.