இன்று வல்வைபாடசாலைகளில் உலக சிறுவர் தினம் சிறப்பு நிகழ்வுகளாக நடைபெற்றுள்ளது. குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் இன்றைய தினம் இது (ஒக்டோபர் 1 ஆம் திகதி) கொண்டாடப்படுகிறது. எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதோடு இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்த நாளிலே நினைவுகூறப்படும். ஏனெனில் சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டுவந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை. பல காரியங்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு வன்முறையாளர்களாக வருவதற்கான சாத்தியமே உண்டு.
சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். பல சிறார்கள் இன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடினாலும், நாம் அறியாத பல சிறு உள்ளங்கள் வேதனையிலும், கஷ்டத்திலும், சித்திரவதைகளிலும் தங்கள் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான சிறுவர்களை நாம் இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பது நம் கடமையாக இருக்கின்றது. உலக முதியோர் தினம் வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளையும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
அந்த வகையிலே வல்வை ஒன்றியத்தினால் மாதாந்தம் முதியோர் அன்பளிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.இதற்கு பிரித்தானிய நலன்புரிச்சங்கத்தின் அனுசரணையுடன் திரு.இளையதம்பி தெய்வேந்திரம் அவர்களினால் வழங்கப்படும் பூரணம் முதியோர் நகழ்வு ஒவ்வொரு மாதாந்த 25,திகதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இவ்பூரணம் முதியோர் கொடுப்பனவு திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தி கொண்டிருக்கும் வல்வை ஒன்றியத்திற்கும் பிரித்தனிய நலன்புரி சங்கத்திற்கும்,அத்திட்டத்தின் கொடையாளியான திரு.இளையதம்பி தெய்வேந்திரம் அவர்களிற்கும் எமது மனமாந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.