இன்று 21/06/2015 லண்டனில் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக 24 ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. என்றுமே இல்லாதவாறு இம்முறை அதிகமான வல்வை மக்கள் வந்து இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை ஒரு வெற்றி விழாவாக மாற்றியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து, பிரித்தானியக் கொடி,தமிழீழத் தேசியக் கொடி,வல்வை நலன்புரிச் சங்கக் கொடி,மற்றும் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகக் கொடிகள் யாவும் ஏற்றப் பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின…