Search

பிரிட்டன் மாணவி கற்பழிப்பு வழக்கில் தலைமையாசிரியர் பதவி விலகல்

பிரிட்டனில் ஷேம்ப்ஷயரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் ஒரு மாணவியை, இரண்டு மாணவர்கள் இரு முறை கற்பழித்துள்ளனர்.

ரோம்சே அருகே ஸ்டான்பிரிட்ஜ் இயர்ல்ஸ்(Stanbridge Earls) சிறப்புப் பள்ளி இயங்கி வருகின்றது. இதில் 191 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருப்பதை கல்வி கண்காணிப்பகமான ஆஃப்ஸ்டெட்(Ofsted) கண்டுபிடித்துள்ளது.

அந்த அப்பாவி மாணவியைப் பாதுகாக்கத் தவறிய பள்ளியின் நிர்வாகம் மீது கண்டனக்குரல் எழுந்தது. அதன் விளைவாக தலைமையாசிரியர் பீட்டர் ட்ரைட்ஹால்(Peter Trythall) பதவி விலகினார்.

இனி வருகின்ற காலங்களில் இரண்டு உதவி தலைமையாசிரியர்கள் இப்பள்ளியின் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்கின்றனர். இவர்களின் சிறப்புக்கல்வி முறைக்காக தனிப்பட்ட ஆலோசகர் உதவியாக இருப்பார். இத்துடன் நிர்வாகக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்காலத் தலைமையாசிரியர் நியமிக்கப்படும் வரை இந்நிலை தொடரும்.

பள்ளியின் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை அறிய வருகின்ற மே மாதத்தில் ஆஃப்ஸ்டெட் அமைப்பினர் வந்து சோதனையிடவுள்ளனர். இது தவிர இந்தப்பள்ளியை நடத்தி வருகின்ற அறக்கட்டளைக் குழுவினரும் வழக்கமான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேறு குழந்தைகள் யாரும் இதுபோன்ற முறை கேடுகளால் பாதிக்கப்பட்டனரா என்றும் ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *