Search

இலங்கைப் படையினரின் தீவிர நடவடிக்கை! புலிகளின் மௌனத்தை கலைக்குமா?

வடதமிழீழம் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் அதி உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த தமிழ் மக்களின் வீடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், பாரம்பரிய நிலங்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளிலும் சிங்களர் படைகள் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, புதிய காப்பரண்களையும் அமைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படைகள் தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக தாம் அமைத்து வரும் புதிய பாதுகாப்பரணை மையப்படுத்தி குரும்பசிட்டி-கட்டுவன்-தெல்லிப்பழை-காங்கேசன்துறை வரை இப்புதிய முக்கரங்க பாதுகாப்பு நில அமைக்கப்படுவதாக வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.ஏற்கனவே மக்களது எதிர்ப்பையும் மீறி இதே போன்று தொண்டமனாறு-ஒட்டகப்புலம்-வசாவிளான் வரை புதிய அரண் அமைக்கப்பட்டிருந்தது.அப்போதும் எஞ்சியிருந்த மக்களது வீடுகள் அழிக்கப்பட்டேயிருந்தது.

தற்போதும் பல வீடுகள் கட்டடங்கள் அழிக்கப்பட்டுவருகின்றது.நிரந்தரமாக பாதுகாப்பு வலயமாக 26 கிராம சேவையாளர் பிரிவுகளை மக்கள நடமாட முடியாத பகுதியாக அறிவித்து பலாலி முதல் காங்கேசன்துறை வரைபேண அரசு முற்பட்டுள்ளது.அதற்கேதுவாகவே இப்புதிய அணை அமைக்கப்பட்டுவருகின்றது.

புதிதாக பாதுகாப்பரண்களை தீவிரமாக அமைக்கும் பணியில் சிறீலங்கா படைகள் ஈடுபட்டுவருகின்றமை விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களின் மௌனத்தை கலைக்கப் போகின்றார்களா என்ற கேள்வி மக்களிடத்தில் எழத் தொடங்கியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *