Month: June 2013

அருள்மிகு வல்லிபுராழ்வார் ஆலய மஹா கும்பாபிஷேகம்,பெருங்குடமுழுக்கு இராசகோபுர பூசை 26.06.2013

அருள்மிகு வல்லிபுராழ்வார் ஆலய மஹா கும்பாபிஷேகம்,பெருங்குடமுழுக்கு இராசகோபுர பூசை 26.06.2013

புலிகளின் முன்நாள் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி விடுதலை செய்யப்பட்டார்:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி இன்று காலை பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயநகர் தங்கபுரத்தை சேர்ந்த தமிழினி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் 2009ம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர்,…

முதன் முறையாக மகனிடம் ஆட்சியை ஒப்படைத்தார் கத்தார் மன்னர்

கத்தார் மன்னர் தனது ஆட்சி அதிகாரம் முழுவதையும், மகன் ஷேக் தமீமிடம் ஒப்படைத்துள்ளார். அரேபியாவின் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தாரின் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி(வயது 61). இவர் கடந்த 1995ம் ஆண்டு மன்னராக இருந்த தனது தந்தையின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கத்தாரின் புதிய மன்னர் ஆனார். ஆட்சிக்கு வந்த பிறகு…

கூட்டமைப்பு – ஜனநாயக மக்கள் முன்னணி சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில் நேற்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்…

தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள் நவனீதம்பிள்ளையை சந்திக்க முயற்சி

கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க முயற்சித்துள்ளனர். சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது மீட்கப்பட்ட செய்மதி தொலைபேசிகளின் ஊடாக இந்தத் திட்டம் அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கைக்கு விஜயம்…

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான்

தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காபூலில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்முறைகளைக் கட்டுப்படுத்த சமாதானப் பேச்சுவார்த்தைகளே சிறந்த வழி என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயும் இணங்கியுள்ளனர். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இருவரும்…

சந்திரிகா – சரத் பொன்சோ கூட்டு அரசியல்!- அரசாங்கத்து​க்கு அதிர்ச்சி வைத்தியம்! ஆளும் கட்சியில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் தலைமையிலான கட்சியின் சார்பில் சந்திரிகாவுக்கு நெருக்கமான சுதந்திரக்…

கூட்டமைப்போடு ஆட்சியமைத்திருந்தால் அரசில் நாமில்லை – ஹக்கீம்!

எமது தாற்பரியத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் புரிந்து கொள்ள முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்திருந்தால், சிறிலங்கா அரசில் நாம்  இருந்திருக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம். கல்முனையில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.    அங்கு அவர்…

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காபூலில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நிலை கொண்டிருந்த படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை…

இலங்கை படையதிகாரிகள் தமிழக பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினர்

இலங்கை படையதிகாரிகள் தமிழக பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் வெலிங்டன் முகாமில் இரண்டு இலங்கைப் படையதிகாரிகள் பயிற்சி பெற்று வந்தனர்.இலங்கைப் படைவீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு அதிகாரிகளும் வெலிங்டன் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார…

சிறீலங்கா படை அதிகாரிகள் பயிற்சிக்கு எதிர்ப்பு- நாம் தமிழர் கட்சியினர் கைது!

உதகை வெலிங்டன் படை கல்லூரியில் பயிற்சி பெறும் சிறீலங்கா வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மானக்ஸா பாலம் வழியாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் வருவார்கள் என கூறப்பட்டதால் அந்த வழியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் கண்டோன்மெண்ட் வழியாக படை கல்லூரிக்கு அருகே வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது…

ரி.56 ரக துப்பாக்கியுடன் விடுதலைப்புலி ஒருவர் கைது :

ரி.56 ரக துப்பாக்கி ஒன்றுடன் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர், வாழைச்சேனை காவற்துறையினரால் நேற்று (23) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, துப்பாக்கியுடன் 30 தோட்டக்கள், ஒரு ரவைக் கூடும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், தப்பிச் சென்ற மற்றைய நபர், விடுதலைப்புலிகளின்…

வல்வை கொத்தியால் வைரவர் மணவாளக்கோல சங்காபிசேகம் நடைபெற்றுள்ளன 23.06.2013 ( படங்கள்)

வல்வை கொத்தியால் வைரவர் மணவாளக்கோல சங்காபிசேகம் நடைபெற்றுள்ளன 23.06.2013 ( படங்கள்)

பொலிகை கந்தவனம் முருகப்பெருமான் கோவில் தீர்த்தத் திருவிழா படங்கள் 23.06.2013

பொலிகை கந்தவனம் முருகப்பெருமான் கோவில் தீர்த்தத் திருவிழா படங்கள் 23.06.2013

செய்திகள்

பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அறிவிக்கப்பட்டது – இலங்கை

பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அறிவிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.சீ.சீ சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரித்தானிய அரசாங்கத்திற்கும், ஸ்கொட்லன்ட்யார்ட் அமைப்பிற்கும் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் இலங்கை ரசிகர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக…