13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ௭டுக்கப்படும் முயற்சி தமக்குத் தாமே குழிதோண்டும் செயற்பாடாகும். அவர்கள் நன்றாக குழியைத் தோண்டட்டும் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
13வது திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் ௭ன்று அமைச்சர் விமல்வீரவன்ச ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு கடிதம் ௭ழுதியுள்ளார். இது குறித்து கேட்டபோதே சம்பந்தன் ௭ம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் அதிகம் பேச நான் விரும்பவில்லை. 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் தமக்கு தாமே அவர்கள் கு