Search

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரன் ஆலயம்

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரன் ஆலயம் இவ்ஆலயமானது 1845ம் ஆண்டு காலப்பகுதியில் இக்கிராமத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்து வந்த சிவஸ்ரீ ஆறுமுகக்குருக்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். குருக்கள் தமது கிராமத்தில் ஓர் ஆலயம் இல்லையே என்று பல நாட்களாக இறைவனை வேண்ட, இறைவன் ஐயாவின் கனவில் ஆனைமுகமும் அழகிய திருவுருவமும் கொண்டு மிகக் கம்பீரத்துடன் காட்சி கொடுத்து எனக்கு இந்த இடத்தில் ஓர் ஆலயம் அமைத்து வழிபடுக என்று ஆலயம் அமைக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு தெய்வீக வாக்கும் கொடுத்து மறைந்தருளினார். கண்விழித்த குருக்கள் குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்த போது அவ்விடத்தில் பல தரப்பட்ட மலர்கள் உதிர்ந்து கிடந்தன. குருக்கள் ஊர்மக்களை அழைத்து நடந்தவைகளை கூற மக்கள் மிக மகிழ்ச்சி அடைந்து அந்த இடத்தில் குருக்களுடன் சேர்ந்து ஒரு சிறிய ஆலயத்தை அமைத்தனர். குருக்கள் நித்திய பூஜையை செய்தார். இவ்வாலயமே இன்று வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயமாகத் திகழ்கின்றது. குருக்கள் ஐயாயைத் தொடர்ந்து அவரின் புத்திரராகிய சின்னையா குருக்கள் கர்ப்பக்கிரக மண்டபம், உள்வீதி, வெளிவீதி ஆகியவற்றை அமைத்து இரண்டு கால பூஜைகளைச் செய்து வந்தார். சின்னையா குருக்கள் சிவபதமடைய அவரின் சுவாமி நதாக்குருக்கள் தொடர்ந்து ஆலயத்தை பராமரித்து நித்தியபூஜைகளையும் சிறப்பாகவும் நடத்தி வந்தார். அவருக்குப் பின்னர் மைத்துனரான சுப்பிரமணியக் குருக்கள் காலத்தில் தரிசன மண்டபம், வசந்த மண்டபம், நிர்தத மண்டபம், தம்ப மண்டபம், தேர், வாகனங்கள் என்பன பொது மக்களால் செய்யப்பட்டு 1959ம் ஆண்டு சித்திரை மாதம் மகாகும்பாபிNஷகத்தையும் நடாத்தி வைத்தார். ஆலயத்தின் அலங்காஉற்சவம் வைகாசி பூரணையை தீர்த்த உற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடாத்தப்படுகின்றது. அன்னாரின் மருமகனான திரு.சிற்றம்பலம் ஐயா கோயிலை பொறுப்பேற்று பொதுமக்களின் உதவியுடன் மணிக்கூட்டு கோபுரம், அசையாமணி என்பனவற்றை செய்து ஓட்டால் வேயும் கொட்டகைகளாக மாற்றி அரிய திருப்பணிகளைச் செய்தார். 1973ல் திருச்சிற்றம்பலம் ஐயா விநாயகப் பெருமானின் திருவடிகளினை அடைய அவரின் மகனாகிய கமலநாதன் ஐயா ஆலயத்தின் பொறுப்பை ஏற்றார். கமலநாதன் ஐயாவின் காலத்தில் பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி பீடங்கள் அமைக்கப்பட்டு கர்ப்பக் கிரக ஸ்தூபி புதிதாக அமைக்கப்பட்டு 1980ம் ஆண்டு தைத்திங்கள் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று சோ. தண்டபாணி தேசிகர் அவர்கள் குருவாக இருந்து கும்பாபிNஷகம் செய்யப்பட்டது. இக் கும்பாபிNஷகத்தினை தொடர்ந்து அழகிய பூங்காவன மண்டபமும் பஞ்சமுக விநாயகர் எழுந்தருளியும் நவக்கிரகம் போன்றனவும் அமைக்க பட்டன. அவர் பின்னர் சி.விக்னேஸ்வர ஐயா ஆலயத்தை ஊர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் பரிபாலித்து வருகின்றார். விநாயகப் பெருமானுக்கும் சண்டேசுவர பெருமானுக்கும் புதிய சித்திர தேர் நிர்மானிக்கப்பட்டு 10.06.95 அன்று விநாயகப் பெருமானுக்கும் சண்டேசுவர பெருமான் ஆரோகணித்து அடியார்களின் பாவங்களைப் பொடி செய்து நல்லருள் பொழிந்தார்.

வேவில் பிள்ளையார் பாடல் வேவில் பிள்ளையாரே கோவில் கொண்ட தேவா வாழ்வில் வளம் தந்து சாவிலும் துணை நிற்பாய் இளமையிலே நாம் விளையாடும் பொம்மையன்றோ காளைப் பருவத்தில் வேளையோ போதவில்லை முதுமை வந்தடைந்தால் ஏக்கத்தால் சாகின்றோம் உன்னை நினைப்பதற்கு எங்கெமக்கு நேரமையா (வேவில்)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *