கோயில்சீரும் திருவும் பொலியும் ஈழ மணித் திருநாடு தேவாரம் பாடிய சிவஸ்தலங்களையும் திருப்புகழ் பாடிய குகன் தலங்களையும் உடையது. அதன் வடகடல் ஓரத்தில் வல்வெட்டித்துறைக்கு கிழக்கே மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புக்களையும் கொண்ட கந்தவனப்பகுதியில் சண்முகப் பெருமான் வீற்றிருந்து அருளபாலிக்கும் பதி தான் பொலிகண்டி கந்தவனப்பகுதியாகும். முருகனுடைய ஆலயங்களுள் கிரிப்பிராந்தம். வனப்பிராந்தம், சமுத்திரப்பிராந்தம் ஆகிய இவற்றுள் இரண்டு சிறப்புக்களையும் ஒருங்கே அமையப் பெற்ற இடம் பொலிகண்டிக் கந்தவனக் கடவையாகும். இவ்வாலயம் மிகவும் பழைமை வாய்ந்தது. கர்ண பரம்பரை வரலாற்றைக் கொண்டது. வெள்ளரித் தோட்டத்தில் வேலாயுதம் தான் தோன்றி யதாக கூறப்படுகின்றது. தற்போதும் ஆலயத்தின் வடக்கு வீதியிலுள்ள நறுநீர்க்கேணியும் அதன் அருகேயுள்ள காலம் கணிக்க முடியாத மூன்று வன்னி மரங்களும் உள்ளது. இந்நறுநீர்க்கேணியின் நடுவிலே உள்ள கல்லில் ஆதி காலத்தில் கற்பூரம் விளைந்ததாக வரலாறு உண்டு. இக் காரணத்தால் இக்கந்தனை கற்பூரக் கந்தன் என்று கூறுவதும் உண்டு. காஞ்சிமாவடிவேலன் என்று அழைப்பார்கள். இவ்ஆலயம் வேலவர் மீது அருணகிரி நாதசுவாமிகளால் திருப்புகழ் பாடப்பட்டது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர் நாண்மணி மாலையையும் பதிகமும் திருப்பள்ளி எழுச்சியும் பாடியுள்ளார். கண்பார்வை இல்லாத புலவரான உடுப்பிட்டி சிவசம்புபுலவர் முருகனின் அருளாணைப்பழ நாண்மணி மாலையும் பதிகமும் பாடி கண்பார்வையைப் பெற்றார். இவ்வாலய வருடாந்த மகோற்சவம் ஆணிப்பூரணையை தீர்த்தமாகக் கொண்ட பதினைந்து நாட்கள் நடைபெறும். பதினைந்து திருவிழாக்களும் பதினைந்து கிராமமக்களால் நடாத்தப்படும









Leave a Reply