Year: 2012

வல்வை செய்திகள்

சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.    

செய்திகள்

யாழில் 72 பேர் கைது!

யாழ். மற்றும் காங்கேசன்துறை பகுதியில் சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 72பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் அதனை தெரிவித்தார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 27பேர், மது போதையில் இடையூறு விளைவித்தவர்கள் 14பேர், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 10பேர்,…

செய்திகள்

மன்னார் – நானாட்டான் பிரதேச மக்களின் அவல நிலை.

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 750 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் உள்ளாகிய நிலையில் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நானாட்டான் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அரச அலுவலர்கள் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெயர்ந்த மக்களின் நலன்களை கவனிப்பதில் இரவு…

வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை

யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறை உள்பட பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை வருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்திலும் வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு கரையேராப்பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே  பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிற்பகல் அல்லது மாலை நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது…

செய்திகள்

பிரபாகரன் பற்றி விசாரணை இல்லை – ஹத்துருசிங்க சொன்னது பொய்: பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கம்

பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின்…

செய்திகள்

மன்னார் ஆயரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் மீது  குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால்…

செய்திகள்

தமிழ்க்கைதிகளை பார்வையிட தூதுக்குழு சிறைக்கு விஜயம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளை தூதுக்குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை சென்று பார்வையிடவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, தம்பர அமில தேரர் மற்றும் மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப் ஆகியோரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று செல்லவுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை அவர்களுடைய குடும்ப…

செய்திகள்

கைதான மாணவர்கள் தொடர்பில் பான் கீ மூனுக்கு அவசர கடிதம்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் பலர் அண்மையில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொடிய…

செய்திகள்

கிளிநொச்சி மக்களின் அவலம் தொடர்கிறது – கடும் மழை வெள்ளப்பாதிப்புக்கள் இடப்பெயர்வுகள் அதிகரிப்பு

தற்போது கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்பட்டு மக்கள் இடம்பெயந்து பாடசாலைகளிலும் பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர். கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 642 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான மருத்துவச் சேவையினை கிளிநொச்சி வைத்தியசாலை உளநல மருத்துவர் வைத்தியர் ஜெயராசா…

செய்திகள்

சீரற்ற கால நிலையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

வன்னியில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடுக்குளம், கிளிநொச்சி குளம், கனகாம்பிகைகுளம், புதுமுறிப்புக்குளம், அக்கராயன்குளம் உட்பட முக்கிய குளங்கள் வான் பாய்ந்து வருகின்றன. பல வீதிகளில் திருத்தப்படாத சீரற்ற பாலங்கள் ஏராளம் காணப்படுவதால் பாதுகாப்பற்ற போக்குவரத்து இடம்பெறுவதுடன், பல பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அல்லது தடைசெய்யப்பட்ட சூழல்…

செய்திகள்

புலித்தடம் தேடி…! மகா. தமிழ்ப் பிரபாகரன் – 01

இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்​னார். ஆனால், எனக்கு கண்ணில் வெடித்தது​போல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவு​வாங்கிய இடம்! கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன் சந்தியைக் கடக்கையில், மனதில் பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச் செல்வதுதான் முல்லைத்தீவை அடையும் வழி. ‘சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது…

செய்திகள்

மழையால் வன்னியின் இயல்புநிலை முற்றாகப் பாதிப்பு

வன்னியில் கடந்த சில நாட்களாக அதிகரித்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்றுமில்லாதவாறு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வசிக்கும் தற்காலிகக் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்ததையடுத்து பாடசாலை போன்ற பொது…

செய்திகள்

ஒஸ்ரேலியாவில் சிங்கள பயங்கரவாத அரசின் கிரிக்கெட் அணிக்கு எதிராக போராட்டம்

சிங்கள பயங்கரவாத அரசின் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் மேல்போனில் பங்கேற்கும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இலங்கை தமிழர்கள் மைதானத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக விளையாட்டு அரங்கில் இருந்து இலங்கையை அகற்ற வேண்டும். ஸிம்பாப்வே விடயத்தில் நடந்துக்கொண்டதை போன்று இலங்கை விடயத்திலும் அவுஸ்திரேலியா தமது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோருகின்றனர்….

செய்திகள்

இலங்கை அரசே புலிகளின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும் – ஹரிசன்

பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன்“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார். துப்பாக்கிகள் மௌனமாகி விட்ட போதிலும், அச்சம், அவமானம், பெளதீக ரீதியான பாதுகாப்பின்மை, சட்டத்தின் ஆட்சியின் குறைபாடு, இராணுவ மயமாக்கல், வடக்கில் சிங்கள மாயமாக்கல், சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் பகிரப்படாத நிலையே அங்கு காணப்படுகிறது. குறைந்தபட்சம் விடுதலைப் புலிகள் சிறிலங்கா…

செய்திகள்

செங்கல்பட்டில் 4-வது நாளாக தொடரும் பட்டினிப் போராட்டம்

தமிழகம் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான தவதீபன், காண்டீபன், ஜான்சன், சவுந்தர்ராஜன் உள்பட 7 பேர் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மற்றக்கோரி கடந்த 23-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராமநிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தினர்….

வல்வை செய்திகள்

சிவகுரு வித்தியாசாலையில் பூப்பந்தாட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது

வல்வை சிவகுரு வித்தியாசாலையிலுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் இன்று காலை பூப்பந்தாட்டஅறிவுரை, ஆலோசனை, பயிற்சிவகுப்பு என்பன  பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்களால் நடாத்தப்பட்டன. இப்பயிற்சினை பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினார்கள். இப்பயிற்சியில் இந்த வருடம் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதிலும்…