விசாகப்பட்டினம்: அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது.

விசாகப்பட்டினம்: அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது.

விசாகப்பட்டினம்: அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. அந்தமான் அருகே வங்கக் கடலில் விசாகப்பட்டினத்தில் இருந்து 1400 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயலுக்கு அஷோபா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது ஒடிசா முதல் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வரை தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் அதன் வழியை இப்போது கணிக்க முடியாத நிலை உள்ளது. 8 அல்லது 9-ந்தேதி இது புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகி உள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.