பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?

பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?

பொய் சொல்லும் ஒரு மனிதர் படபடப்புக்கும் மன அழுத்தத்துக்கும் உட்படுவது தவிர்க்க முடியாதது என்னும் கொள்கையின் அடிப்படையில், பொய்யறி கருவி செயல்படுகிறது. மேற்கூறிய மனநிலைகளில் பொய் சொல்பவரிடம் சில உடலியல் மாற்றங்கள் (physiologicsl changes) கட்டாயம் நிகழும். 

இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங்கும். இம்மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு பொய்யறி கருவியால் ஒருவர் கூறும் பொய் பற்றிக் கண்டறியப்படும். சோதனைக்கு உட்படும் மனிதருக்கு மார்பு அணி, இரத்த அழுத்தக் கருவி ஆகியவை அணிவிக்கப்படுவதோடு, அவரது உள்ளங்கையில் மின்கலங்களின் மின்வாய்களும் (electrodes) பொருத்தப்படும்.

பின்னர் இவரிடம் பல வினாக்கள் கேட்கப்பட்டு அவரது எதிர்வினைகள் (reactions) சோதிக்கப்படும்; வினாக்களுக்கான அவரது விடைகள் உளவியல் வல்லுநர் ஒருவரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அவர் கூறுகின்ற பொய்கள் கண்டறியப்படும்.

Leave a Reply

Your email address will not be published.