எதிரிடையாக இயங்கும் இரு விசைகளைச் சமன்படுத்துதல் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் பாரசூட் இயங்குகிறது. கீழே விழும் எந்த ஒரு பொருளின் மீதும் இரண்டு விசைகளின் தாக்கம் இருக்கும். அவ்விசைகள் முறையே ஈர்ப்பு விசை (gravity) மற்றும் காற்றின் தடை என்பனவாகும்.
ஈர்ப்புவிசை பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும்; காற்றுத்தடை பொருளை மெதுவாகக் கிழே விழச் செய்யும். காற்றுத்தடையின் விசையானது கீழே விழும் பொருளின் மேற்பரப்புக்கு நேர் விகிதத்தில் இருக்கும்; அதாவது மேற்புறம் பரப்பளவு மிகுதியாக உள்ள பொருள் மெதுவாகக் கீழே இறங்கும். பாரசூட்டின் பரந்து விரிந்துள்ள மேற்கவிகையானது (canopy) காற்றுத்தடை விசையால் விரைந்து கீழிறங்குவது தாமதப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக பாரசூட் மெதுவாகவும் மென்மையாகவும் தரையிறங்குகிறது.