பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம்: பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புகள் காரணமாக இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை (20.08.2026) இரவு ஆலயத் திருவிழா நடைபெற்றபோது அதிகளவில் வாண வேடிக்கைகள் இடம்பெற்றதுடன், அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுக்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக திருவிழாவில் கலந்துகொண்ட பலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை விரைவாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட பேருந்தொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.