Search

புலிகளின் கோட்டையான குடும்பிமலையில் நினைவுச்சின்னம் !

மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் புதிய போர் நினைவுச்சின்னம் ஒன்றை நிறுவி வருகின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வன்னியில் சிறிலங்கா படையினரின் போர் வெற்றியை நினைவு கூரும் வகையில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இறுதிப் போர் நடைபெற்ற பகுதியில், போர் நினைவுச்சின்னங்களை அமைத்து, அந்தப் பகுதிகளை சிங்கள மக்களின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது சிறிலங்கா இராணுவம். இந்த போர்ச்சுற்றுலா மையங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள், இன நல்லிணக்கத்துக்கு உதவாது என்று அனைத்துலக ஊடகங்கள் விமர்சித்து வருகின்ற நிலையில், கிழக்கில் மற்றொரு நினைவுச்சின்னத்தை சிறிலங்கா படையினர் அமைத்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் கோட்டையாவும் சிறிலங்கா படையினருக்கு பெரும் சவாலாகவும் விளங்கி வந்த குடும்பிமலையிலேயே இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் போர் நினைவுச்சின்னத்தின் கட்டுமானப் பணிகளை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்தவாரம் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published.