மன்னார் அணியை வீழ்த்தி வல்வை ஆதிசக்தி அபார வெற்
றி இரண்டாவது போட்டியாக மன்னார் சென் ஜோசப் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழகமும் மோதியது . விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற போட்டியில் முதல் கோலினை மன்னார் சென் ஜோசப் விளையாட்டுக் கழக வீரர் போட தமது ஆட்ட வேகத்தை அதிகரித்த ஆதிசக்தி வீரர் ஒரு கோலினை போட போட்டி சமிநிலையில் இடைவேளையை தொட்டது . இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆதிசக்தி வீரர்கள் மேலும் இரண்டு கோலினை போட்டு தமது வெற்றியை உறுதிசெய்து கொண்டனர் ஆட்ட நேர முடிவில் 3 – 1 என்ற கோல் கணக்கில் மன்னார் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கி கொண்டது வல்வை ஆதிசக்தி விளையாட்டு கழகம்