பருத்தித்துறை பிரதேச சபையினால் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டியில், 2012ம் ஆண்டுக்கான
போட்டியில் ,வல்வை விளையாட்டுக் கழகம் சார்பில் ஈட்டி எறிதலில், வல்வையை சேர்ந்த மகாலிங்கம் மயுரன் அவர்கள் 2011ம் ஆண்டின் தனது சாதனையை தானே முறியடித்து, மீண்டும் 49.88M ஈட்டி எறிந்து முதல் இடத்தை பெற்று தனது சாதனையை நிலைநாட்டியுள்ளார் .இவர் மேலும் மாவட்ட அளவில் தெரிவாகி சிறப்பாக விளையாட வாழ்த்துவோம்.
பருத்தித்துறை பிரதேச சபையினால் நடாத்தப்படும் 2012ம் ஆண்டுக்கான அத்தலாட்டிக் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் மு. தங்கவேல் அவர்களின் வழி நடத்தலில் மகாலிங்கம் மயுரன் தலைமையில் அனைத்து விளையாட்டுக்களின் புள்ளிகள் தரத்தில் முதலிடம் பெற்று
வல்வை வரலாற்றில் 32 வருடங்களுக்குப் பின் முதல் தடவையாக சைம்பியன் கேடயத்தை தனதாக்கி கொண்டது விளையாட்டுத்துறையில் வல்வை சிறப்பாக தொடர்ந்து விளையாட மீண்டும் வாழ்த்துவோம்.