சென்னையில் லயன்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் 1100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் உருவாக்கப்பட்டு லிம்கா உலக சாதனை படைக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள குட்ஷெப்பர்டு தேவாலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆயிரம் பேருக்கு புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியாகவும் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சென்னை டயேசிஸ் சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்தி ஸ்டேன்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ எடை மற்றும் 500 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட கேக் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த பிரம்மாண்ட கேக் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.