வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த பெரியவர்களாலும் , இளைஞர்களாலும் வீடுகளில் வைக்கப் பட்டிருந்த விநாயக முகூர்த்தங்கள் எடுக்கும் வைபவம் தைப்பொங்கல் தினத்தில் மாலை பொழுதில் சிறப்பாக நடைபெற்றிருந்தது
மார்கழி மாதமுழுவதும் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயக முகூர்த்தங்களை சேகரித்து, ஊர்தியில் வைத்து, மங்கள வாத்தியத்தியத்துடன் எழுந்தருளச் செய்து, நீர் சார்ந்த நிலைகளான சமுத்திரத்தில் கரைக்கப்படுவது வழமை . இந்த வருடம் மிகவும் சிறப்பாக எலி வாகனமான இயந்திரத்தில் விநாயக முகூர்த்தங்கள் எடுத்து சமுத்திரத்தில் சங்கமிக்க செய்திருந்தார்கள்.
இதன் சிறப்புக் காரணமாக, மாதத்தில் சிறந்த மாதம் மார்கழி என சொல்லப்படுகிறது.