வல்வை சிதம்பரக்கல்லூரியின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டமானது வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, KKS வீதி வழியூடாக தொண்டமனாறு சந்தி தொண்டமனாறு சந்தி ஊடாக உடுப்பிட்டி சந்தி, உடுப்பிட்டி ஊடக வல்வெட்டித்துறை சந்தி, வல்வெட்டித்துறை சந்தி, வல்வை சிதம்பரக்கல்லூரி வரை ஓட்டம் நடைபெற்றது. பெண்களுக்கான மரதன் ஓட்டமானது வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, KKS வீதி வழியூடாக வல்வை சிதம்பரக்கல்லூரி வரை ஓட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்களும், பாடசாலை நலன்விரும்பிகளும், மாணவர்களின் பெற்றோரும் மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கினார்கள்.