இப்பாடசாலை 1889ம் ஆண்டு நிறுவப் பெற்றது. 1720ம் ஆண்டளவில் வல்வையில் ஸ்தாபிக்கப்பட்ட புனித செபஸ்தியார் றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் திண்ணைப்பள்ளிக்கூடமாகச் சில காலம் இருந்தது. பின்னர் கோயில் வளவிலே ஒரு சிறு கட்டிடத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் அரசினர் மருந்தகமாயிருந்த பழைய வைத்தியசாலை அரசினார் காணியில் மாற்றப்பட்டது. தற்போது இப்பாடசாலை மேலும் வளர்ந்துள்ளது.