கார்திகை மாதம் விளக்கு ஏற்றுவது எதற்கு? அறிவியல் விளக்கம்

அந்தக்காலத்தில் மின்சாரம் இல்லை பெரிய கட்டிடங்கள் இருக்கவில்லை. வெறும் நிலா வெளிச்சமும் குப்பி விளக்கும் குடிசையுமாகவே மனிதர்களுடைய வாழ்க்கை நகர்ந்தது. இதற்காகவே எமது முன்னோர்கள் பல வாழ்க்கை முறமைகளை கடைப்பிடித்து அதனை கட்டுப்பாடாவும் விதிக்கத்தொடங்கினார்கள். இவ்வாறு எமது முன்னோர்கள் பெரியோர்கள் கூறிய ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளக்கம் அறிவியல் ரீதியாக இருக்கத்தான் செய்கிறது.

இவற்றில் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட பல உண்மைகளையும் நீங்கள் எமது தளம் மூலம் அறிந்திருப்பீர்கள். அதனைப்போன்றுதான் கார்த்தினை விளக்கு ஏற்றுவதற்கும் ஒரு சரியான அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது. இது தற்போதைய தொழில்நுட்ட யுகத்திற்கு பொருந்தவில்லை எனினும் கூறப்பட்ட காரணம் பொய்யாகாது.  ஆன்மீகம் என்ற பெயரில் கூறப்பட்ட ஒவ்வொரு செய்திக்கும் அறிவியல் விளக்கம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இச்செய்தி.

கார்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கு வைப்பது வழக்கம். மழை காலத்தில் மாலை நேரத்தில் மழையால் அடித்து கொண்டு வரும் பாம்புபோன்றவை வீடுகளில் ஒதுங்க நினைக்கும். விளக்கு வெளிச்சம் இருந்தால் அவை வராது. வந்தாலும் வெளிச்சத்தில் தெரியும்.

தெரு விளக்கு இல்லாதுகாலத்தில் நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு இது. பரமாத்மா என்ற கடவுள் பெரும் ஜோதி , அதில் இருந்து ஏற்றப்பட்ட அகல்மாதிறி நாமெல்லாம் சின்ன சின்ன ஜோதிகள் என்ற உணர்வோடு நாம்விளக்கு ஏற்ற வேண்டும்.

ஆன்மீகம் என்ற பெயரில் கூறப்பட்ட ஒவ்வொரு செய்திக்கும் அறிவியல் விளக்கம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இச்செய்தி.

செய்தி வகை: 

Leave a Reply

Your email address will not be published.