வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டமானது திக்கம் சந்தியிலிருந்து தொடங்கி KKS வீதி வழியாக வல்வெட்டித்துறை மதவடியில் நிறைவடைந்தது. ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில்
சுமார் 55 பேர் கலந்து கொண்டார்கள் . குறிப்பிடக் கூடிய அம்சமாக 53 பேர் தமது மரதன் ஓட்டத்திற்கான முழுத்துராத்தினையும் ஓடி முடித்தார்கள் . பெண்களுக்கான மரதன் ஓட்டமானது மயிலியதனையில் தொடங்கி வல்வெட்டித்துறை மதவடியில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்களும், பாடசாலை நலன்விரும்பிகளும், மாணவர்களின் பெற்றோரும் மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கினார்கள்.