திருவிழாக்களில் புதிய புதிய முறைகளை புகுத்துவதில் வெளிநாட்டினருக்கு ஆர்வம் அதிகம். தக்காளி திருவிழா, திராட்சையை கொட்டி அதன் மீத ஏறி விளையாடுவது போன்றவை விநோத திருவிழாக்கள் ஆகும்.
ஸ்பெயின் நாட்டினரோ முள்ளங்கி விழா என ஒன்றை கொண்டாடி வருகின்றனர்.உடலுக்கு குளுமையைத் தரும் காய்கறியான முள்ளங்கியை சமையலில் பயன்படுத்துவோம்.ஆனால் ஸ்பெயின் நாட்டிலோ விநோத நிகழ்வுகளில் முள்ளங்கித் திருவிழாவும் ஒன்று, பயோனல் நகரில் இடம்பெற்ற இத் திருவிழாவில் நகர மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். விநோத உடை அணிந்து வரும் மனிதன் மீது முள்ளங்கிகளை கொண்டு எறிவார்கள். இதனால் தெருக்கள் தோறும் முள்ளங்கி மயமாக காட்சி அளிக்கும்.
இவர்களுக்கு ஏன் இந்த முள்ளங்கித் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது இது வரை தெரியாது. காலம் காலமாக நடைபெறும் ஒரு சம்பிரதாய் நிகழ்வாகவே இது அமைகிறது.