வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் அமரர் விஷ்ணுசுந்தரம் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே மாபெரும் 9 நபர் கொண்ட ஒருநாள் உதைபந்தாட்ட தொடரினை இன்றைய (25/06/2017) தினம் றெயின்போ மைதானத்தில் நடாத்தியது..அந்த வகையில் இச்சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்திலே வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது.. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்திலே ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பதிவு செய்யாத காரணத்தினால் ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.. எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட தண்ட உதையில் பிரசாந்தின் அசத்தல் கோல்காப்பின் துணையுடன் 4-3 என்ற கோல்கணக்கில் இளங்கதிர் அணியானது வெற்றியீட்டி சம்பியனாகியது…..
இச்சுற்றுத்தொடரின் தொடராட்ட நாயகனாக இளங்கதிர் அணியைச் சேர்ந்த பிரசாந் , சிறந்த கோல்காப்பாளராக அதே அணியைச்சேர்ந்த விஜிகரன், நன்னடத்தை அணியாக றெயின்போ அணியும் மற்றும் மக்கள் மனம் கவர்ந்த வீரராக றெயின்போ அணியைச்சேர்ந்த சங்கரும் தெரிவு செய்யப்பட்டது…
மேலும் வெற்றி பெற்ற இளங்கதிர் அணிக்கு சுழல் கிண்ணம் , வெற்றிக்கிண்ணத்துடன் 15000 ரூபா பணப்பரிசிலும் இரண்டாம் இடம்பிடித்த சைனிங்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 10000 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது..
இரு அணிகளும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் இறுதியாட்டத்தில் மோதியமை குறிப்பிடத்தக்கது.. மேலும் இளங்கதிர் அணியானது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக எவ்வித தோல்வியையும் சந்திக்காமல் பெற்றுக்கொள்ளும் வெற்றிக்கிண்ணம் இதுவாகும் …..
அ.சி .விஷ்ணுசுந்தரம் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே 9நபர் கொண்ட ஒருநாள் உதைபந்தாட்டம்



































Leave a Reply