வல்வையில் தேசிய தொழில் தகமை கற்கை நெறி பயிற்சி வகுப்புக்கள் நடை பெற்றுவருகின்றன.
கடந்த ஆண்டு 2017 ஆனி நடுப்பகுதியிலிருந்து இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையம் ஒன்று வல்வை மாலுமிகள் நலன்புரிசங்கத்தின் வலுவுட்டலில் வல்வெட்டித்துறை பழைய நகரசபை மண்டபத்தில் இயங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது திறமைகள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயற்சி அமைச்சயின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையும் ஒன்றாகும்.
இந்த வல்வை தொழிற் பயிற்சி நிலையத்தில்
1.தையற்கலை
2.ICT-கணணித் தொடர்பாடல் என்கின்ற இரு முழுநேரக்கற்கை நெறிகளும்
3.பிரத்தியோக ஆங்கிலம்
இவ் வகுப்பானது பகுதி நேமாக சனி ஞாயிறு தினங்களிலும் நடைபெற்று வருகின்றன, ஆங்கிலக் கற்கை நெறி கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமானது. தையல் கலை ICT என்பன முழுநேரமாக காலை 08.45 முதல் மாலை 04.00மணிவரை ஆறுமாதங்கள் நடைபெற்று பின்னர் ஆறுமாதங்கள் பயிற்சியையும் உள்ளடங்கியது பயிற்சி காலத்தில் இவர்களிற்கு சம்பளமும் வழங்கப்படுகின்றது. கடந்த ஆண்டுப் பரிவில் தையல் கலைக்கு 19 பேரும் ICT வகுப்பிற்கு 16 பேரும் சேர்ந்து படித்துள்ளார்கள் இதில் தையல் கலை பயின்ற 15 மாணவியர் கொழும்பில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 20000 ரூபா ஊதிய்துடன் அமர்த்தப்பட்டுள்ளார். ICT பயின்ற மாணவியருள் மூவர் வல்வை நகர சபையில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரத்தியேக பகுதிநேர ஆங்கில வகுப்பானது NVQ தரம் 2க்குரியது. மொத்தமாக 200 மணித்தியாளயங்களைக்கொண்டது இதில் 51 மாணவர்கள் இரு வகுப்புக்களில் கற்றுவருகின்றனர். பகுதிநேர கற்கைநெறிகளுக்கு கட்டணம் உண்டு 6750 ரூபாய் கட்டணம் இந்த ஆங்கில கல்வியை மாணவர்கள் 3000 ரூபாயுடன் கற்ற ஏதுவாக மிகுதியை வல்வை மாலுமிகள் நலன்புரிசங்கமும் சிவன் அறக்கட்டளை நிறுவனமும் வதிரியை சேர்ந்த தொழிலதி திரு தங்கவேலாயும் ஜங்கரனும். அன்பளிப்பு செய்துள்ளனர். இந்த ஆங்கில கற்கை நெறியானது. யாழ் மாவட்டத்தில் வல்வெட்டித்துறையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த ஆங்கிலக் கல்வியானது இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் இலங்கை முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் ஒரே நேரத்தில் இரு வகுப்புக்கள் வல்வை நிலையத்தில் மாத்திரம் நடைபெறுவது குறிப்பிடதக்கது. இந்த ஆங்கில வகுப்பிற்கான இறுதிப்பரீட்சை இலங்கை பூராகவும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த (2018) ஆண்டு தைமாதத்தில் ஆரம்பமான 2வது பிரிவில் தையல் கலைக்கு 25 பேரும் ICTக்கு 22 பேரும் சேர்ந்துள்ளனர் மாதாந்த பரீட்சை ஆசிரியர்களால் வைத்து பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டு விசேட கவணம் எடுக்கப்படுகின்றது அப்படி நடந்த ஒரு பரீட்சையின் போது எடுக்கப்பட்ட படங்களையே நீங்கள் காண்கிறீர்கள்.
எமது ஊரிற்கு இந்த பயிற்சி நிலையம் ஒரு அரிய வாய்ப்பு எமது இளைஞர்களும் யுவதிகளும் இதனை பயன்படுத்தி தமது வாழ்வை வளமாக்கி கொள்ளவேண்டும் என்று வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் எதிர்பார்த்து நிற்கிறது. 1.அழகியற்கலை 2.வெளி இணைப்பு இயந்திரம் பழுதுபார்த்தல். என்கின்ற இரு கற்கை நெறிகளையும் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.












Leave a Reply