சைனிங்ஸ் மென்பந்தாட் இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி எதிர் றெயின்போ அணி மோதவுள்ளது.

இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி எதிர் றெயின்போ அணி மோதவுள்ளது.

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட தொடர் நேற்றைய தினம் இடம்பெற்றது. விலகல் முறையில் நடைபெற்றது

முதலாவது அரையிறுதி போட்டியில் நேதாஜி எதிர் றெயின்போ அணிகள் மோதின.முதலில் ஆடிய றெயின்போ அணி 10 ஓவர்கள் நிறைவில் 116 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேதாஜி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்றது.

றெயின்போ அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.
ஆட்டநாயகன்:கபிலன் (றெயின்போ )

இரண்டாவது அரையிறுதி போட்டியில் உதயசூரியன் எதிர் சைனிங்ஸ் அணிகள் மோதின.முதலில் ஆடிய உதயசூரியன் அணி 32 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றது.

சைனிங்ஸ் அணி 1 விக்கெட்டினால் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.
ஆட்டநாயகன்:பிரசாந் (சைனிங்ஸ்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *