இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி

இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி

இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் ஊருக்குள் கடல்நீர் வெள்ளம் போல் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவின் சுலேவேசித் தீவில் இன்று பிற்பகல் (28) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மையம் தொிவித்துள்ளது.

நில நடுக்கத்தில் சிக்கி ஒருவா் உயிாிழந்துள்ளாா். 10 போ் காயமடைந்துள்ளனா்.

இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. 2 மீற்றர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின. திடீரெனக் கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது. இதில், மசூதியொன்று பலத்த சேதமடைந்தது.

மக்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மாடிகளில் தஞ்சமடைந்தனர்.

எனினும், சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *