
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோயிலின் 15 நாட்கள் திருவிழாவைத் தொடர்ந்து சித்திரை முழுநிலவன்றைய கடல்நீராட்டுடன் இந்திரவிழா கொண்டாடப்படுகின்றது.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடல் வணிகத்தால் செல்வம் கொழித்த வல்வெட்டித்துறை கரையார் சமூகத்தினர் காலனிய எல்லைப் பகுப்புகளால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தம்முன்னோர் செய்துவந்த வணிகத்துக்கான கடல்வழிகள் அடைக்கப்பட்டு மீனவர்களாகச் சுருங்கிய போதிலும் அவர்களின் செல்வச் செழிப்பு நீடிக்கவே செய்தது.
இந்திர விழா பார்க்க செல்லும் அயற்கிராமப் பெண்கள் வல்வெட்டித்துறைப் பெண்கள் அணியும் நகைகளை வியந்து பார்ப்பதற்காகவே அதிகம் சென்றதாக அவரின் பாட்டி கூறியதாக அதன் அயல் ஊர் நண்பர் ஒருவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
தற்போது வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக் காலம்.
படத்தில் வல்வை முத்துமாரி அம்மன்.
Nadesapillai sivendran













Leave a Reply