வல்வையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், வல்வை நலன்புரிச் சங்கத்தால் (ஜ.இ) இங்கிலாந்தில் திரட்டப்பட்ட புத்தகங்கள் கடந்த மாதம் வல்வை ஒன்றியத்திற்கு இங்கிருந்து அனுப்பப்பட்டன. இன்று வல்வை ஒன்றியமும் வல்வை நலன்புரிச் சங்கமும் (ஜ.இ) இணைந்து சிவகுரு வித்தியாசாலை, வல்வை மகளீர் பாடசாலை, றோமன் கத்தோலிக்க பாடசாலை, அமெரிக்கன் மிசன் பாடசாலை, விக்கினேஸ்வரா பாலர் பாடசாலை, கணபதி பாலர் பாடசாலை ஆகியவற்றுக்கு புத்தகங்கள் நேரடியாக வழங்கப்பட்டன
இன்னும் ஓர் இரு தினங்களில் வல்வையில் உள்ள மற்றைய பாடசாலைகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இன்னும் ஓர் இரு தினங்களில் வல்வையில் உள்ள மற்றைய பாடசாலைகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன.