நாட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் விலை 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 184 இலிருந்து 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, இதன் புதிய விலை 207 ரூபாவாக அதிகரித்துள்ளது.
புதிய விலை உயர்வால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.










