சர்வதேச கராத்தே நடுவராக வல்வை புளூஸ் வி.க உறுப்பினர் அ.செல்வமனோகரன் (செல்வன்)

சர்வதேச கராத்தே நடுவராக வல்வை புளூஸ் வி.க உறுப்பினர் அ.செல்வமனோகரன் (செல்வன்)

மூத்த விளையாட்டு வீரர் அருளானந்தசாமி செல்வமனோகரனை (செல்வன்) சர்வதேச தற்காப்பு கலை அமைப்பு (WUMP) தனது சர்வதேச நடுவர்களில் ஒருவராக நியமித்துள்ளது.

தனது சிறுவயது முதல் விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடைய இவர் தனது திறமைகளை அன்று முதல் இன்றுவரை பல போட்டிகளில் நிரூபித்து பரிசில்களை லாவகமாகத் தட்டிச் செல்லும் ஓர் வீரன்.

‘சாதிப்பதற்கு வயது ஓர் தடையல்ல’ என்று அடிக்கடி கூறுபவர் அதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார்.

இவருக்கு எமது இணையதளம் வல்வை மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *