வல்வெட்டித்துறை ஊரணி ஊற்றுக்கு முன்பாக பூமி உள்வாங்கியுள்ளது.
வல்வெட்டித்துறை ஊரணி ஊற்றுக்கு முன்பாக உள்ள பிரதான வீதி751 அருகாமயில்,நேற்றைய தினம் காலை நிலத்தடி நீரோட்டம் அதிகரித்தமையினால் பூமி உள்வாங்கியுள்ளது இதன் காரணமாக பிரதான வீதி அருகாமை உடைந்து உள்சென்றுள்ளது.
உள்வாங்கல் ஆனது கிட்டத்தட்ட 8 அடிக்கு ஆழமான குழியினை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரதேசத்தில் 2015ஆம் ஆண்டும், ஒரு சில தினங்களுக்கு முன்பும் நேற்றைய தினமும் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் பூமி உள்வாங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதற்கு மக்கள் பலர் நிரந்தரமான தீர்வை எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.









