வல்வை செய்திகள்

31 நாள் நினைவஞ்சலி அமரர் இராசா பூபாலச்சந்திரன் (பூபாலப்பா)

31 நாள் நினைவஞ்சலி அமரர் இராசா பூபாலச்சந்திரன் (பூபாலப்பா)

ஆலமரம் போலும்
அரிய நிழல்தந்து
வாழும்வரை அதனின்
விழுதாக வாழ்ந்தமகன்!

நேற்றுவரை எம்வீட்டு
நிலவாய் ஒளிர்ந்துவிட்டுக்
காற்றோடு காற்றாகக்
கலந்துவிட்ட கர்ப்பூரம்!

குடும்பத்துப் பூமாலை
குலைந்துவிட்ட சோகத்தி்ல்
அடங்காத துயர்த்தீயில்
அழிந்தெரியும் வேளையிலே

ஆறுதலைத் தந்து
ஆனதுணை யாயிருந்து
கூறுமொழி யாலெங்கள்
குற்றுயிரை வருடிவிட்டு

என்னென்ன வழியுளதோ
அன்னன்ன வழியிலெலாம்
அன்பார்ந்த ஆதரவை
அள்ளிப் பகிர்ந்துதந்து

வலைத்தளங்க ளூடாயும்
குறுஞ்செய்தி வழியினிலும்
தொலைபேசிச் செய்தியிலும்
தொடர்துயரிற் பங்கேற்று
அஞ்சலிப் பதாதைகள்
அஞ்சலிப் பிரசுரங்கள்
அஞ்சலி மலர்வளையம்
அத்தனையும் மனமுவந்து

காடுவரை வந்தெம்
கடன்தீர்த்த வேளையிலும்
கூடவிருந் தெங்கள்
குறைகளையத் துணைநின்று

மலர்சிறக்க இரங்கலுரை
மனநிறையத் தந்துவந்து
நினைவு மலர்மலர
நிறைதமிழைத் தந்துதவிய
அன்புள்ளங்கள்
அத்தனைக்கும்-
நன்றி!
மிகநன்றி!
இவ்வண்ணம்
பூபாலப்பா குடும்பத்தினர்.