31 ஆம் நாள் நினைவஞ்சலி

அமரர் இராமநாதன் ராஜாராம்
பிறப்பு : 07.08.1971 இறப்பு : 31.01.2022
கடந்த 31.01.2022 அன்று இறைபதம் அடைந்த
எமது குடும்ப செல்வன் அமரர் இராமநாதன் ராஜாராம் அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை 02.03.2022 அன்று அதிகாலை 5.00 அளவில் ஊறணி அந்தியேட்டி மடத்தில் இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
நேரில் வருகை தந்தும் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்திய உற்றார் , உறவினர் , நண்பர்கள், அன்பு உள்ளங்கள், மற்றும் எமக்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த உள்ளங்களுக்கும் எமது குடும்ப சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம்.
இங்கனம்
பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்












