வல்வை நலன்புரிசங்கம் ஆவுஸ்திரேலியாவின் கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கோடைகால ஒன்று கூடல் 2022 .

அன்பார்ந்த அவுஸ்திரேலியா வாழ் வல்வை உறவுகளே …

வருடாந்த கோடைகால ஒன்று கூடலை தை 7 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்த தீர்மானித்துள்ளோம் . இடம் : McCoy Park McCoy St , Toongabbie , NSW 2146
காலம் : Saturday 7th January 2023
நேரம் : 10.00 am

புலம்பெயர்ந்து வாழும் வல்வை உறவுகள் அனைவரும் வழமை போல் இந்த வருடமும் மைதானத்தில் கோடைகால ஒன்று கூடலில் கூட இருப்பதால் உங்கள் குடும்பத்தினருடன் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம் .

வல்வை நலன்புரிச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை ( 1999 – 2023 ) வரவேற்பதோடு 7th January 2023 இல் நடைபெறும் பொது குழு கூட்டத்தில் வெள்ளிவிழா ஆண்டை மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதால் வெள்ளி விழா நிர்வாக சபையில் அங்கம் வகிக்க விரும்புபவர்கள் தாமாக முன்வந்து உங்களுடைய பெயர் விபரங்களை முன் கூட்டியே தற்போதைய நிர்வாக குழு உறுப்பினர்களிடம் தந்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .

      வருடாந்த சந்தா பணத்தினை செயற்குழு உறுப்பினர்களிடமோ அல்லது நலன்புரி சங்க வங்கி கணக்கிற்கு ( Account name : ValvaiNalanpuriSangamAustralia , BSB : 062-339 Account number : 1092 3848 , Reference : Please put your name same as appearing on VVT list ) நேரடியாக செலுத்தி அதற்குரிய பற்றுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம் .

வழமை போல் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுக்களும் அத்துடன் நமது ஊருக்கே உரித்தான உணவு பண்டங்களும் பரிமாறப்பட இருப்பதால் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வேண்டி நிற்கின்றோம் .

தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி .

வல்வை நலன் புரிச் சங்கம் அவுஸ்திரேலியா – செயற்குழு 2022 .