சாதனையாளர் கௌரவிப்பு யா/சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ரகு சிறீதேவி கணிதப்பிரிவில் 3A சித்தி பெற்றமைக்காக பாராட்டிக் கௌரவிப்பு

சாதனையாளர் கௌரவிப்பு யா/சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ரகு சிறீதேவி கணிதப்பிரிவில் 3A சித்தி பெற்றமைக்காக பாராட்டிக் கௌரவிப்பு

யா/சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ரகு சிறீதேவி கணிதப்பிரிவில் 3A சித்தி பெற்றமைக்காக பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 02.05.2025 வெள்ளிக்கிழமை காலை, சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் திரு வேல்விநாயகம் பரமேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

கல்லூரி வரலாற்றில் கணித விஞ்ஞானப் பிரிவில் முதல்முறை 3A சித்தி பெற்று கல்லூரிக்குப் பெருமையைத் தேடித்தந்தமைக்காக ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய மாணவியை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய கணித பாடத்திற்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு ரி. சுஜிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன்புரிச் சங்கத்தினர்; பழைய மாணவர்சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள். நலன் விரும்பிகள் உட்பட கல்லூரிச் சமூகத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கல்லூரிச் சமூகத்தினர் மாணவியை வாழ்த்தி, பாராட்டுரைகளை நிகழ்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். அவுஸ்திரேலியாவில் வதியும் திரு திருமதி ரவீந்திரன் மஞ்சுளா தம்பதியினர் மாணவியை ஊக்குவிக்கும் பொருட்டு மடிக்கணனி ஒன்று வழங்கியிருந்தனர். மாணவிக்குக் கற்பித்த ஆசிரியர்களும் பழைய மாணவர் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

எளிமையாகவும் சிறப்பாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வு கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒர் முன்னுதாரணமான செயற்பாடாக அமைந்திருந்தது.