மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி பெருமானின் இரதோற்சவம் இன்று பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் இடம்பெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை தரிசிக்க பெருந்திரளான பக்தர்கள் ஆலய வளாகத்திலும் வீதிகளிலும் ஒன்றுகூடி, பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

வேல் உண்டு வினையில்லை…
மயில் உண்டு பயமில்லை…

என்ற பக்தி முழக்கங்கள் விண்ணை அதிரச் செய்ய, முருகப்பெருமானின் அருளை வேண்டி பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திருத்தேரோட்டம் மாவிட்டபுரத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், தமிழர்களின் பக்தி மரபையும் வெளிப்படுத்தும் முக்கியமான திருவிழாவாக திகழ்கிறது.

மாவிட்டபுரம் கந்தசுவாமி பெருமானே போற்றி! போற்றி!

வேலவா சரணம்! முருகா சரணம்!