மரண அறிவித்தல் திரு ஜெயரட்ணம் ஸ்ரீதரன்
மலர்வு : 17 யூலை 1944 — உதிர்வு : 30 ஓகஸ்ட் 2013
யாழ். தொண்டைமனாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஸ்ரீதரன் அவர்கள் 30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லைநடராசா காமாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பகீரதன்(பகி- லண்டன்), புஷ்பரஞ்சி(ரஞ்சி- ஜேர்மனி), ஜெயவாணி(வாணி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சர்வாங்கநாயகி(அம்மனா), காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன்(ரஞ்சன்), ஸ்ரீவரதன்(அப்பர்), வலிதாங்கநாயகி(பெற்றி), பத்மநாயகி(பவுணா), ஸ்ரீகுகன்(குகன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கல்பனா, ஞானேஸ்வரன், வாகீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தரன், தனுஜன், தாரிகா, ஆருஜன், ஆரணி, அனோபன், நதீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 03-09-2013 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் கெருடாவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் |
மனைவி, பிள்ளைகள் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|