வல்வெட்டித்துறையின் நலன்விரும்பியும் கல்விமானுமாகிய கலாநிதி சபா.ராஜேந்திரன் (குட்டிமணிஅண்ணா)
அவர்களால் வல்வெட்டித்துறையில் உதைபந்தாட்டத்துக்கான செயற்கைமுறை மைதானவிரிப்புகொண்ட
FUTSALமைதானம் அமைக்கப்பட்டு அதன் வேலைகள் முடிவடைந்துள்ளன.குட்டிமணிஅண்ணாவின் திட்டமிடுதலில் அவரதும் அவரது குடும்பத்தினரதும் உதவிகளை கொண்டு இந்த மைதானம்அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழா வருகின்ற 15.04.2012(ஞாயிறு) அன்று நடைபெறஉள்ளது.
மிகவும் வளர்ந்த முன்னேற்றமடைந்த நாடுகளில் காணப்படும் இந்த மைதானமுறையை எமது ஊரில் ஏற்படுத்திய குட்டிமணிஅண்ணாவின் சிந்தனையும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக உழைத்த அவரது உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.நன்றியுடன் என்றென்றும் நினைவில் கொள்ளதக்கதும்.