Search

முக்கியஅறிவித்தல்-குளிர்கால ஒன்றுகூடல்-2013 சம்பந்தமானது.

அன்பான வல்வை மக்களே, வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானிய கிளையால் வருடா வருடம் கோடைவிழாவும் அதனைப் போலவே குளிர்கால ஒன்றுகூடலும் சிறப்பாக நடாத்தப்பட்டு வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
கோடைவிழா 2013 சிறப்பானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடாத்திமுடிக்கப்படுவதற்கு நீங்கள் அனைவரும் அளித்த அற்புதமான ஒத்துழைப்பும் உதவிகளும் நன்றியுடன் என்றென்றும் நினைக்கப்படும். அதனைப்போலவே எமது குளிர்கால ஒன்றுகூடல் வரும் 14.12.2013 சனிக்கிழமை அன்று Wallington Hall, Stafford Road, Wallington, Surrey, SM6 9AQ எனும் இடத்தில் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் நடாத்த எண்ணியுள்ளோம்.எனவே சென்றமுறையை போலவே எமது மக்கள் தமது ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கவேண்டும் என்று வேண்டிநிற்கின்றோம்.
நாம் வருடா வருடம் மிகவும் திறமைச்சித்திகள் அடைந்த வல்வை மாணவ ,மாணவிகளுக்கு சிறப்பு சான்றிதழும்,பரிசுகளும்,வெற்றிக் கிண்ணமும் வழங்கி வருகின்றமை நீங்கள் அறிந்த விடயமே . எனவே சென்றஆண்டு பரீட்சைகளில் சிறப்பு சித்திஅடைந்த மாணவ ,மாணவிகளின் பெற்றோர் தயவு செய்து உடனடியாக கீழே நாம் கொடுத்துள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெயர்களையும் பரீட்சை சம்பந்தமானதும் பெற்ற சித்திகள் சம்பந்தமானதும் தரவுகளை பதிவுசெய்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

நிகழ்ச்சிகளை வழங்க எண்ணியுள்ளோரும் தயவுசெய்து தமது பெயர்களையும் நிகழ்வுசம்பந்தமான விபரங்களையும் பதிவுசெய்ய அழைக்கின்றோம். இது நம் அனைவரின் விழா.அனைவரும் இணைந்து வெற்றியுடன் நடாத்துவோம்.

தொடர்வுகளுக்கு:

உதயணன்                   075 780 86782

சித்தியடைந்த மாணவர்கள் தொடர்வான பதிவுகளுக்கு :

B.ஞானச்சந்திரன்      075 774 04084   ,   K. சிதம்பரதாஸ்    079 543 26784   ,    T.சங்கர்   078 287 86415

நிகழ்வுகள் (கலை,கலாச்சாரம்)  தொடர்வான தொடர்வுகளுக்கு :

B. ரிஷிச்சந்திரன்      078 901 85111  ,    N.இரத்தினசிகாமணி   074 564 60735

நன்றி

நிர்வாககுழு

வல்வை நலன்புரிச் சங்கம்-பிரித்தானியா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *