வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான பொதுக்கூட்டம்

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் 19.01.2014 அன்று நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டம். குறித்தநேரத்திற்கு போதிய வல்வையர்கள் சமூக அளிக்காத படியாலும், சங்கத்தின் யாப்பு விதிகளுக்கு அமைய 25 பேர் வந்தவுடன் தாமதமாகவே கூட்டம் ஆரம்பம் ஆகியது. கூட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கூட்டம் கௌரமான நடைமுறையில் நடைபெற்றது. முக்கியமாக கணக்கு அறிக்கை விளக்கங்கள் விரிவாக வழங்கபட்டு வினாக்களுக்கு விடைகளும் பகிரப்பட்டது. இவ் நிகழ்ச்சி நிரல்கள் நிறைவடைய நேரம் 8.45pm நிமிடம் ஆகிவிட்டது.
போசகர் சோ.செ.தெய்வச்சந்திரன் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்வதற்கு முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் நேரம் போதாமையின் காரணத்தினால் கூட்டம் 26.01.2014 ஞாயிறு மாலை 6மணிக்கு North East Mitcham Community Association,Woodland Way,Mitcham,Surrey ,CR4 2DZ எனும் முகவரியில்புதிய நிர்வாகசபை உறுப்பினர்களை தெரிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே அனைத்து வல்வையர்களும் தவறாது குறித்த நேரத்திற்கு வந்து பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

செ.தெய்வேந்திரன்
(தற்காலிக தலைவர்)
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *