இத்திரைப்பட வெளியீடு சம்பந்தமாக திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை :
வல்வையரின் தயாரிப்பில் உருவாகி பெரும் பொருட்செலவுடனும், நவீன தொழில்நுட்ப யுத்திகளை பயன்படுத்தியும் பெரும் எதிர்பார்ப்புடன்வருகின்ற 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவரவிருக்கும் எமது பெரும் முயற்சியான” பனி விழும் மலர் வனம் “தமிழ்த்திரைப்படத்தினை எமது சொந்தங்கள் அனைவரும் கண்டுகளித்து எமது கன்னி முயற்சிக்கு ஆதரவளிக்க உங்கள் உதவி மிகவும் அத்தியாவசியமானது.
எமது படைப்பு வெற்றி பெறுமிடத்து எத்தனையோ எமது கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கபோகும் நிறுவனமாக CTN PRODUCTIONதிகழும் என்பதில் உண்மை. அந்த வகையில் எண்ணற்ற பார்வையாளர்களைதன்னகத்தே கொண்டு உலா வரும் உங்கள் இணையத்தளத்தில் எமது படைப்பு சம்பந்தப்பட்ட காணொளிகள் , புகைப்படங்கள் , வெளியீடுசம்பந்தமான காட்சிப்பதாதைகள் என்பவற்றினை வெளியிட்டு எமது திரைப்படத்தினது வெற்றிக்கு ஆதரவு நல்க வேண்டி நிற்கின்றோம்.

பனி விழும் மலர்வனம் தமிழ் திரைப்படம் படத்தினை பற்றியும் அதில் எம்மவர் பங்களிப்பு பற்றியும்சில தகவல்கள் ..
இப்படத்தின் தயாரிப்பாளர்களாக கனடாவினை சேர்ந்த மாருதி நந்தன், ரவி இந்திரன் மற்றும் S.K. அரவிந்த் ஆகியோரும் தயாரிப்புமேற்பார்வையினை ரவி இந்திரன் அவர்களும் தயாரிப்பு நிர்வாகத்தினை S.K. அரவிந்த் அவர்களும் மேற்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் வல்வை மண்ணின் மைந்தர்கள் என்பது எம் எல்லோருக்கும் பெருமையே.
மேலும் அனிமேசன் புலியினை Raymaxநிறுவனத்தின் இயக்குனர்களான A.K செல்வதாசன் , A.K கமலதாசன் ஆகியோர் திறம்பட செயலாற்றியுள்ளனர். இவர்களின் அனிமேசன்ஆக்கங்கள் சர்வதேச அளவில் பேசப்படும் என்பது உறுதி.
மேற்குறிப்பிட்டவர்கள் தவிர மேலும் பல எம்மவர் இணைந்து இரண்டு வருடங்கள் தொடர்ந்து உழைத்து இத்திரைப்படத்தினைவெளிக்கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக அரசின் தணிக்கைக்குழுவினதும் வரிவிலக்கு குழுவினதும்பாராட்டுக்களை இந்த திரைப்படமானது ஒரு சேர பெற்றிருப்பது பாராட்டுக்கு உரியது.
உங்கள் உளப்பூர்வமான ஆதரவினை வழங்கி எம்மவர்களின் பெருமுயற்சிக்கு ஊக்கமளிக்க வேண்டுகின்றோம்.














Leave a Reply