பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்(பைலட் ஞானம்)அவர்களின் இரண்டாம் வருட கண்ணீர் அஞ்சலி!…

01

தோற்றம் : 28.12.1966              மறைவு : 29.04.2012

காத்திருப்போம் உங்களிற்காய்!…….

 

நாட்கள் ஓடி வருடங்களிரண்டு

நகர்ந்து போனது

எங்கள் வாழ்கைமட்டும் அப்படியே

உறைந்து போனதே

பார்க்குமிடம் எல்லாம் உங்களுடன்

வாழ்ந்த நினைவுகள்

பாசத்துடன் தேடுகின்றோம் நீங்கள்

ஓடி வாருங்கள்!…

 

இனிதுவாழ்ந்த எங்கள் இல்லறத்தில்

என்கணவன் ஆனீர்கள்

என்பிள்ளைகட்கும் மாசில்லாத நல்ல

தந்தை ஆனீர்கள்

ஊர்உலகம் போற்றும் வல்ல சமூக

சேவையாளன் ஆனீர்கள்.

எங்கள் உள்ளத்திலே என்றும்

வாழும் தெய்வமானீர்கள்!…

 

வல்வையிலே பிறந்ததற்காய் பெருமை

கொண்டீர்கள்

அந்தமண்ணிற்கு பெருமைதரும் வாழ்வு

வாழ்ந்தீர்கள்

இல்லையென்று சொல்லாத பெருமனது

கொண்டீர்கள்

நீங்கள் இல்லையென்றால் மனிதம்இல்லை

எனும் வரலாறுதந்தீர்கள்.

 

யார் யார்கோ உதவிசெய்து நீங்கள்

வாழ்ந்தீர்கள்

பேர்தெரியா மனிதருக்கும் பைலட்

ஆனீர்கள்

உங்கள் பேர்கூறும் பிள்ளைகளை

ஏன் மறந்துபோனீர்கள்

உங்களின் பாசம்தேடி அலைகின்றார்

ஓடி வாருங்கள்!…

 

நேற்றுவாழ்ந்த வாழ்கை எமக்கு

நினைவில் இனிக்குது

நீங்கள்இல்லையெனும் நினைவுவந்தால்

நிஜமே கனக்குது

பார்குமிடம் எல்லாம் உங்கள்

பாதை தெரியுது

கூட்டிப்போக யாருமில்லை வழி

காட்ட வாருங்கள்!….

 

ஞானம் என்றபெயரோடு வாழ்ந்து

வென்றீர்கள்

நாங்கள்தோற்றுவிட்டோம் உங்களையே

தேற்றவாருங்கள்

காற்றுவந்து உங்கள் குரல்

காட்டிப்போகுது

நாங்கள் காத்திருப்போம் உங்களிற்காய்

எமைக் காணவாருங்கள்!…

உயிரைப்பிரிந்து துயருரும்

அன்பானமனைவி பிள்ளைகள் மற்றும்

பெற்றோர் உற்றார் உறவினர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.