Year: 2012

செய்திகள்

விடுதலைப்புலிகளின் அடிப்படை மனநிலை இன்னும் உலகில் உள்ளது – டளஸ் அழகப்பெரும

30 வருடங்கள் நாட்டில் இடம்பெற்று வந்த போரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் முடிவுக்கு கொண்டு வந்து விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முற்றாக அழிந்து போயினர்.  ோரின் இறுதி வாரத்தை கூறி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒய்வுபெற்றாலும் அவரை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என எரிக் சொர்ஹெய்ம்…

செய்திகள்

இனப்பிரச்சினைக்ககான தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை – TNA

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு முறைமை…

செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்கள் மருத்துவமனையில்!

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் பிரதான சாலையை ஒட்டியபடி அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அங்கு நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் 2 பேரும். 38 இலங்கை அகதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 பேர் திடீர் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு…

அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் –இராசேந்திரம் குகானந்தநாயகி

மரண அறிவித்தல் –இராசந்திரம் குகானந்தநாயகி பெயர் இராசேந்திரம் குகானந்தநாயகி பிறந்த இடம் சிங்கப்புர் வாழ்ந்த இடம் தொண்டைமானாறு,ஊரிக்காடு,வல்வெட்டித்துறை ,leicester uk இவர் 29/12/2012அன்று  இறைவனடி சேர்ந்தார்.இவர் ஊரிக்காட்டைச் சேர்ந்த இராசேந்திரம்(குட்டிமாமா) அவர்களின் அன்பு மனைவியும்  சியாமளாதேவி,குகப்பிரியை,முரளிதரன் செளபாக்கியவதி,கிருபாகரன் கருணாகரன் ஆகியோரின் தாயாரும்,பாஸ்கரன்,ராசமூர்த்தி,சூரியகுமார்,யமுனா ,சித்திரா ஆகியோரின் மாமியாரும் கார்த்திகா ,புருசோத்தமன்,கிருஷாந்தன்,துவாரகன்,செவ்வந்தி, ராகவி, கோகுலவதனி,ஆரபி,ஆருரன் ஆகியோரின் அன்பு பேத்தியும்…

செய்திகள்

அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழ்க் கனேடியர்கள்! குற்றவாளிகள் அல்ல என்று நீதிபதி முன் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு 2006ம் ஆண்டில் கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழ்க் கனேடியர்கள் இருவரும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 32 வயதான சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் 36 வயதான பிரதீபன் நடராஜா ஆகிய இருவரும் தங்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கனடாவில் தாக்கல்…

செய்திகள்

புலனாய்வுத் துறையால்அதிர்கிறது யாழ்ப்பாணம்

ஒரு வாரகாலப்பகுதிக்குள் சுமார் 45 தமிழர்களை போலிக்குற்றச் சாட்டில் சட்டத்துக்கு முரணாக கைது செய்த சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு, நேற்று முன்தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதியோடு செயற்பட்டு வருபவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணைக்கு அழைத்திருந்து. அதேவேளை, தமிழர் தேசத்தின் அபிலாசைகளையும் அவலத்தையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தி வரும் மன்னார்…

செய்திகள்

சஞ்ஜீவ பண்டார மீது தாக்குதல்!

இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார இன்று காலை தாக்குதலுக்குள்ளான நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது நினைவு தினத்தை அனுஸ்டித்து பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பும் போது இன்று அதிகாலை 2 மணியளவில் சஞ்ஜீவ பண்டார தாக்குதலுக்குள்ளானதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. களனி பல்கலைக்கழகத்திலிருந்து 2…

செய்திகள்

முள்ளிவாய்க்கால் முடிவா, தொடக்கமா? – ஜெகத் கஸ்பார்

சீனாவின் மேலாதிக்கம் இலங்கையில் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் அந்த வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். இவ்வாறு நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். `நாம்’ அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில்…

செய்திகள்

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு பணிய மாட்டோம் – மஹிந்த ஹத்துருசிங்க

தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று யாழ்ப்பாண கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் படையினர் விழிப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர்…

செய்திகள்

மருத்துவர் இ.சிவசங்கர் இராணுவத்தினரால் கைது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார். மேற் குறிப்பிட்ட மருத்துவரை இராணுவம் நேற்றுக் கைது செய்யது கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக…

வல்வை செய்திகள்

வல்வை சிவன் கோவிலில் மார்கழித் திருவாதிரை உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வல்வை சிவன் கோவிலில் மார்கழித் திருவாதிரை உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவாதிரை உற்சவத்தின் போது நடராஜப் பெருமான் வீதி உலாவும், நடராஜர் திருக்கூத்தும் இடம்பெற்றது. இலங்கையில் பல சிவன் கோவில்கள் இருந்த போதிலும், நடராஜர் திருக்கூத்து நடைபெறுவது ஒருசில சிவன் கோவில்களில் மட்டுமே. அத்தகைய நடராஜர் திருக்கூத்து நடைபெறும் கோவில்களில், வல்வெட்டித்துறை சிவன்…

செய்திகள்

ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! – ச.ச.முத்து

27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும்…

அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்-செல்வி ரம்யா ஞானச்சந்திரபோஸ்

மரண அறிவித்தல்-செல்வி ரம்யா ஞானச்சந்திரபோஸ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ரம்யா ஞானச்சந்திரபோஸ் அவர்கள் 29-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ஞானச்சந்திரபோஸ்(கப்பல் ஞானி), ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகளும், கௌசி, கீர்த்தி, நிலா ஆகியோரின்  அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை, சீதாலட்சுமி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற தவமணிதேவி ஆகியோரின்  அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்…

செய்திகள்

இந்த நீர்மூழ்கியில் தான் புலிகள் ஆயுதங்களை கரைசேர்த்தனர் ?

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கப்பல் மூலம் வருவது வழக்கம். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை நோக்கிவரும் ஆயுதக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மிப்பது மிக மிகக் குறைவாகும். அது இலங்கையில் இருந்து பல மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் தரித்து நிற்கும். இதன்போது புலிகள் ஒருவகையான நீர் மூழ்கிக் கப்பல்களைப்…

செய்திகள்

எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் -சரத் பொன்சேகா

அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவுமின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமனானதாக…